Search

Monday, October 22, 2012

நகைச்சுவை கதை


நகைச்சுவை கதை

[01]ஒரு சிறுமி மாம்பழம் வாங்கி வந்தாள். அதை தன அம்மாவுக்கும் கொஞ்சம் கொடுத்து சாப்பிட ஆசைப் பட்டாள். எப்படிப் பகிர்வது என்று தெரியவில்லை. அம்மா சொன்னார், எனக்குப் பாதி கொடுத்தால் அது உன் அன்பைக் காட்டும். பாதிக்கு மேல் கொடுத்தால் அது உன் தியாகத்தைக் காட்டும். சிறுமி சிறிது நேரம் யோசித்து விட்டு,பழத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள், அம்மா நீங்களே பகிர்ந்து கொடுங்கள். உங்கள் தியாக குணம் எனக்குத் தெரியும்.

........................................................................................................................................

[02] கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?


மனிதன்: லண்டனுல இருந்து ஸ்ரீலங்கா கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!


கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.


மனிதன்: அப்ப என் லவ்வர் பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை    கேட்கனும், எதையும் வாங்கிக்தர வேண்டும் என கேட்க கூடாது...


கடவுள்: ஸ்ரீலங்கா கு ரோடு சிங்கிளா, டபுளா...???????????? 

........................................................................................................................................



[03] ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும். கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.

........................................................................................................................................



[04]நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”


“ஆம் மன்னா!”



“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.


அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

#ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!


........................................................................................................................................
[05]ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.''கடமையில் கருத்தாக இருப்பான்.ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்.

''அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்துவிட்டு,'பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?'என்று கேட்டார்.அவனோ,

''எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன்.இப்போது கூட ஒரு பந்தயம்.உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன்.பந்தயம் நூறு ரூபாய்.''என்றான்.'



எனக்கு முதுகில் மச்சமே கிடையாது.நீதோற்று விட்டாய்.நீயே பார்,''என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.



மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான்.


புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார்.''அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன்.இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்,''என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.

உடன் பதில் வந்தது.

''நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீர்கள்.

புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான்

அங்கு வந்தான்.வெற்றி அவனுக்குத்தான்.'





........................................................................................................................................
[06]மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?''எனக் கேட்டான்.'



'வராது''என்றான் அமைச்சன்.



வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.


அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்த போதுகடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான்.

திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக் கேட்டான்.

அவனோ,''மன்னா,எனக்குத் தெரியாது.ஆனால் என் கழுதைக்குத் தெரியும்.மழை வரும் முன் அது தன காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.

உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.

இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,''அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான்

.என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.''


........................................................................................................................................
[07]
ஒரு பயணி,டாக்சியில் சென்று கொண்டிருக்கும்போது,

அதன் ஓட்டுனரிடம் ஏதோ கேட்பதற்காக,அவன் முதுகில் லேசாகத் தட்டிக் கூப்பிட்டான்.

உடனே ஓட்டுனர் நிலை குலைந்து,


இன்னொரு காரை நெருங்கி மோதாமல் தப்பித்து,

அடுத்து வந்த ஒரு லாரியின் மீது இடிக்காமல் தப்பித்து,

ஒரு மரத்தின் மீது மோதுமுன் காரை நிறுத்தினான்.

சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.

ஓட்டுனர் பயணியிடம் சொன்னார்,''என் உயிரே போகும் அளவுக்கு என்னைக் கலங்க வைத்து விட்டாயே?'

'பயணி மன்னிப்புக் கேட்டுக்கொண்டே,

''உன் முதுகில் லேசாகத் தட்டியது இவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை

.''ஓட்டுனர் சொன்னார்,

''இல்லை,இது என்னுடைய தவறுதான்.

இன்று தான் முதல்முதலாக நான் டாக்சி ஓட்டுகிறேன்.

கடந்த பத்தாண்டுகளாக நான் வேனில் பிணங்களைத்தான் எடுத்துப் போய்க்கொண்டிருந்தேன்.''

நமது அனுபவங்கள் கடந்த காலத்தால் பாதிக்கப் படுகின்றன.
........................................................................................................................................


[08]காசேதான் கடவுளடா.
********** ***********

ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.


அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்





.ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.



அந்தக் கஞ்சனும் பெருமையாக,எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன், என்றான்.அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,

கஞ்சன் சொன்னான்,என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.



# நீதி
என்னதான் இருந்தாலும்... காசேதான் கடவுளடா...
(அப்பாடா.. இருநூறு ரூபாய் மிச்சம்)


........................................................................................................................................



[09] இப்படிக்கு உன் அன்புக் கணவன்


மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.



மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipie

nt) முகவரிக்குச் சென்றுவிட்டது.

வேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.



பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள்.



அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது.

அன்பான மனைவிக்கு,

எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
--இப்படிக்கு உன் அன்புக் கணவன்


........................................................................................................................................


[10] ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள். ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?

ஃபாதர் சொன்னார்.. என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்ட

ுவிடும்.”



அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.


பாதிரியார் பெருமையுடன், என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார் என்றார்.



அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, “அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?” என பாடின.



தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு” என்றது உற்சாகத்துடன்..!!!!



........................................................................................................................................

[11] ஒருத்தன் வேகமா ரோட்ல பைக்ல போகும்போது ஒரு கிளி மேல மோதிட்டான், கிளி அடிபட்டு மயக்கமாகி விழுந்துட்டுது! அந்த பையன் கிளிமேல பாவப்பட்டு அதுக்கு வைத்தியம் பாத்து, ஒரு கூன்டுல சாப்பாடு போட்டு பத்திரமா வச்சிருந்தான்! முழிச்சு பாத்த கிளி நினைச்சுதாம் "அய்யய்யோ நாம மோதினதுல பையன் spot out போல! நம்மள பிடிச்சு ஜெயில் ல போட்டுடாங்க" அப்புடின்னு!

........................................................................................................................................

[12] ஒருவர் "டீ" கடையில் உக்காந்து இருந்த போது இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல படுவதைப் பார்த்தார். அவருக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்துசெல்ல அவருக்கு பின்னே சுமார் 500 பேர் வரிசை மாறாமல் நேர்த்தியாக போய்க்கொண்டு இருப்பதை பார்த்து வரிசையில் போகும் ஒருவரிடம் கேட்டார்

" யாருடைய ஊர்வலம் இது?"

"முதலில் செல்வது என் மனைவி!"
"என்னாச்சு அவருக்கு? "

"என் நாய் அவரை கடித்து கொன்று விட்டது!"

"இர
ண்டாவது?"

"என் மாமியார்! மகளை காப்பாத்த போய் அவரையும் கடித்து கொன்றுவிட்டது!"

உடணே முதலாமவர் ஆர்வத்துடன் கேட்டார் "இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?"

இரண்டாமவர் சொன்னார்
"அதற்க்கு போய் வரிசையில் நில்லுங்கள்...!"


........................................................................................................................................





[13] மது ஒழிப்பு பிரச்சாரம் :
மதுவை நாம் நாட்ல இருந்து
அழிக்கணும் .,
So Daily நான் 2 full wisky குடிச்சு அழிகிறேன்.,
நீங்க Daily 3 Quarter குடிச்சு
அழிச்சிடுங்க..
ஏதோ நம்மால முடிஞ்ச சமூக சேவை.
சரக்கு அடிப்போம் மதுவை
ஒழிப்போம் ....
#தம்பி நமக்கு நோபல்
பரிசு ஏதாவது கிடைக்கிற
வாய்ப்பு இருக்கா ?





........................................................................................................................................





[14]மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?

கணவன்: பருப்பும் சாதமும்.

மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.

கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.

மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.

கணவன்: முட்டைப் பொரியல்?

மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.

கணவன்: பூரி?

மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.

கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?

மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.

கணவன்: மோர் குழம்பு?

மனைவி: வீட்ல மோர் இல்ல.

கணவன்: இட்லி சாம்பார்?

மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.

கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.

மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.

கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?

மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.

கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!









........................................................................................................................................









[15] சுவாமி இந்த பூமி ஏன் சுற் றுகின்றது
மகனே கேள் ஒரு குவாட்டர் தண்ணி அடிச்ச நீயே
தலை கீ ழா நடக்கும் போது 3 குவாட்டர் தண்ணிய தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சு ற் றுவதில் என்ன அதிசயம் மகனே ??
----------சுவாமி குவாட்டர் கோவிந்தசாமி









........................................................................................................................................


[16] நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா?”

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
...
பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா?என்ன நினைத்தாய்?” அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.

அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.

சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.

சொன்னாள்”நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி.உங்கள் மன நிலையைப் பார்க்க
எண்ணி அவ்வாறு செய்தேன்”

இளைஞன் உரக்கச் சொன்னான்”என்ன?ஓர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா?மிக அதிகம்”

இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.

அவள் குறுகிப் போனாள்.

அவன் சொன்னான்”நான் ஒரு வழக்கறிஞர்.யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்...!








1 comment: