Search

Wednesday, August 25, 2010

கை கூ கவிதைகள்..

கை கூ கவிதைகள்..

[01] 
நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் என் சுவாசத்தில் உன்மூச்சு
கலந்திருக்குமென எண்ணி உனக்காக சுவாசிக்கிறேன்.....


[02] 
இங்குநீ வரமாட்டாய் என்பதை கூட மறந்து,மணிக்கணக்கில் உன் பிம்பங்களை தேடிக்கொண்டிருக்கின்றன கண்கள்.....


[03] 
அம்மா.......போலியில்லா உன்முகம் பார்த்து உன் மடியில் தலைசாய்த்து என் தலை கோதும் விரல்களோடு வாழத்தான் பிடித்திருக்கிறது.......எனக்கும் உன் அருகாமை இல்லாதபோது காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள் நுழைந்த வெறுமை.


[04] 
நேசிக்கும் ஒருவர் உன்னை நேசிக்கும் போது தான் உன்னை நீயே நேசிக்கின்றாய், அந்த ஒருவரையும் பிரியும் போது தான் நீ சுவாசிப்பதையே சுமையாய் நினைக்கின்றாய்..

[05]
 
கண்ணாடி முன் நின்று உன்னை நீ அழகு படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய் ,ஆனால் அந்த கண்ணாடியோ ,
உன்னை பார்த்து தன்னை அழகு படுத்தி கொள்கிறது .


[06]

சுழற்றியடிக்கும் சூறாவளியில்சிக்கிக்கொண்ட நீர்க்குமிழிகளாய்என்னைச் சுற்றிலும் பறந்தபடியேஇருக்கின்றன எனதுகடந்த கால நினைவுகள்.......

[07]
உன் கொலுசும்...புன்னகையும்...இரட்டைப் பிறவிகளா
இரண்டும் கலகலவென்று சிரிக்கின்றனவே..!


[08]

கடல் அலைகளும் வானும் நிலவும்
இன்னும் எதுவெல்லாமோ அழகு என்போர்
உன்னை பார்த்ததில்லையோ ?


[09]
தொலைத்துவிட்டேன்.... காதல் கனவுகளில் வாழ்க்கை எனும் வசந்தத்தை தொலைத்துவிட்டேன்... துன்பக் கடலில் இன்பம் எனும் இலக்கியதை தொலைத்துவிட்டேன்... அறியாமை இருளில் அறிவு எனும் ஆயுதத்தை தொலைத்துவிட்டேன்.... நட்பு நிழலில் நண்பன் எனும் நல்லவனை தொலைத்து விடுவேனோ என்று பயம்...!!! இன்று என் வாழ்வில்....


[10]

அன்புடன்... எனது எண்ணங்களை வெளிப்படுத்த... இமைகளை திருடிக்கொண்டு கனவுகளை கண்டு மகிழ் என கட்டளையிடுகிறாய்!!! அமைதியாய் இருந்துகொண்டு இம்சையை இனிமையாய் தருகிறாய்!!! உன்னைப்பார்த்ததை தவிற பிழையேதும் செய்யவில்லை நான்... ஆனால் தவிப்பும் தாகமும் தண்டனையாய்... பெற்றுக்கொண்டிருக்கிறேன். இவையாவும் இன்றுவரை நீ அறியாமல் இருப்பதனால் என் இதயப்பகுதி புண்ணாய் எரிகிறது இந்த தீராவலிதான் காதலா!!!!!!!!!!!

 

[11]சிரிக்கும் பறவையாய் உன்னை பார்த்த பின்னே பறக்கிறேன் சிறகில்லாமல் நான்..!
 

[12]யாரிடமும் அதிக அன்பு வைக்காதே..! ஏன் என்றால்? பிரியும் நேரத்தில் அழுவது கன்களாக இருக்காது... இதயமாகதான் இருக்கும்..!


[13]
என் இதயத்தில் எழுதிவைத்தேன் "அனுமதி இல்லை என்று" ஆனாலும் அவளின் நினைவுகள் உள்ளே வந்து சொன்னது "எனக்கு படிக்க தெரியாது என்று"


[14]என் வாழ்க்கை பாதையில் எத்தனையோ அறிமுகங்கள்... அத்தனை அறிமுகங்களும் உன்னைப் போல் என் ஆன்மாவைத் தொட்டதில்லை! நமது ஒன்றாண்டு காலநட்பை எண்ணிப் பார்க்கிறேன்... அந்த இனிய நாட்கள் யாவும் காலத்தால் அழியா காவியங்கள்! காலங்கள் மாறலாம்; கனவுகள் கூடலாம்; ஒவ்வொரு கனவிலும் நிஜங்க...ளின் நிழல்கள்! இரவின் மடியில் நட்சத்திரங்கள் கொள்ளும் அன்பு நிஜம் என்றாலும், வெகுதூரம் என்பதுதான் உண்மை! அந்த தூரம் நம் நட்புக்கு இல்லை ஜென்மங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை ! ஜென்மம்என்று ஒன்று இருந்தால். வினாடி நேரமும் உன்னைப் பிரியாத உறவாய்…! நீ..!!! எனக்கு வேண்டும்.. நான் வேண்டும் வரம் இது ஒன்று தான்.....
 
[15]

விழிகள் மோதிய விபத்தின் காயம் காதல்.. காயத்தின் மயிலிறகு சிகிச்சை நட்பு..! தவங்கள் செய்தால் தானே வரங்கள் கிடைக்கும்.. எந்த தவமும் செய்யாமல் நீ மட்டும் எப்படி எனக்கு கிடைத்தாய்..? (என்) நிழலைத் தேடி (இந்த) நிஜத்தின் பயணம்..! எப்போது உன்னை காண்பேனென்றோ நீ எப்பட...


[16]
வாழ்க்கைப் பாதையில் வலிமிகும் பொழுதுகளில் ஏக்கங்கள் எழுந்து எரிக்கின்ற வேளைகளில் உணர்வுகள் உடைந்து உயிர்சுடும் கணங்களில் எனக்கு வலிக்க முன்னரே தனக்கு வலிப்பதாக உணர்பவள் தாய்...

[17]
ஒருநாள் வந்துஓசையின்றி அழுதாள் உதிர்ந்து விட்டேன்.....


[18]
என் இதழ்களைக் கேட்டுப் பார் என் நெஞ்சத்தின்
வேதனை சொல்லும்!!! என் இமைகளைக் கேட்டுப் பார் என் கனவுகள் கலைந்த விதம்
சொல்லும்!!!
என் இதயத்தைக் கேட்டுப் பார் என் ஆசைகள் சிதைந்த விதம்சொல்லும்!!!
என் இரவைக் கேட்டுப் பார் கண்ணீர் வடிக்கும் என் உன் நினைவுகளைச் சொல்லும்!!!

[19]
எப்படி முடிந்தது ?என்று முறிந்தது ?
நமக்குள் பிளவும் தொடர்புக்கு முற்றுப் புள்ளியும்
உண்டானது நிஜமா?



[20]
காலமெல்லாம் உன்னில் வாழும் என்று நினைத்த என் காதலை
கனவில் வாழும் காதலாக மாற்றிவிட்டாய்
நீ .........கனவுகளாக்கிய என் காதலை
நினைவுகளாக மாற்றுகிறேன் என் கவிதை வரிகளுக்குள்



[21]
 தன்னை நேசித்த இதயத்தை மறப்பது பெண்ணின் குணம்
தன்னை மறந்த பெண்ணையும் நேசிப்பதே ஆணின் குணம்


[22]
நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு
மனதில் புதைத்து ...மரணம் வரை தொடர்வது தான்
உண்மையான நட்பு


[23]
எல்லோருக்கும் தெ‌ரியு‌ம் அது பன்னீர் எ‌ன்று யாருக்கு தெ‌ரியு‌ம் அது ரோஜாவின் கண்ணீர் எ‌ன்று...!!!


[24]
என்னை விட்டுச் சென்ற அவளை இன்னும் காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன்..
அவளை மறக்க முடியாமல் இல்லை...!இன்னொருத்தியை நினைக்க தெரியாமல்


[25]
பிரிந்து இருந்தாலும் மறந்து இருப்பேன், உன் பிரிவைமட்டும். உன் நினைவுகள் என் இதயத்தில் இமயமாக.........
 [26]
உன் வாழ்வில் வரவொன்று வந்த பின்னும்
இன்னும் என்னோடு உன் நினைவுகள் ........
உன்னை மறக்க நினைக்கும் போது எல்லாம் மரணத்தை தழுவ நினைக்குது மனம்.



 [27]
தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!
தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!
இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய்!
எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் ?????????????????????????



 [28]
காரணம் சொல்லாமல் கலைந்து போக இது "கனவும்" இல்லை
காரணம் சொல்லி பிரிந்து போக இது ஒன்றும் "காதலும்" இல்லை
உயிருள்ளவரை தொடரும் உண்மையான உறவு "நட்பு"

 [29]
நண்பனே நட்பு என்பது ரோஜா போன்றது வாடாமல் பார்ப்பது நம் கடமை அதில் உண்டு இனிமை....ஆனால் அதில் ஒரு இதழ் விழுந்தாலும் கடைசியில் காம்பாக எஞ்சுவாய் என் போல்...பணம் பார்ப்பது ஒரு நடப்பு... பாசம் பார்ப்பது ஒரு நட்பு புரிந்துகொள் நட்புடன் வாழ்வாய்........

 [30]
ஆசையாய் அணைத்து முத்தமிட்டதும் பரவியது உதட்டில் ஒரு வெப்பம் -சிகரெட்...

 [31]
உண்மை சொல்ல கண்கள், பொய் சொல்ல பெண்கள்,
அதை நம்பியே ஆண்கள்,உண்மை சொன்ன கண்கள் சிறை அறையில்
பொய் சொன்ன பெண்கள் மணவறையில்
அதை நம்பிய ஆண்கள் கல்லறையில்

 [32]
‎"மரணத்தின் கண்களில் மையெழுதுவேன்நான் வரிகூட்டி வாசிக்க வைப்பேன் - இருட்டினைப் பொய்யுண்ணும்; பொய்யை மரணமுண்ணும்; அஃதினை மெய்யுண்ணும்; மெய்யினையோ நான்."

 [33]
என்னால் விழித்திருக்க முடியும் நீயின்றி என்னால்உறங்க தான் முடியாது.என்னால் அழ முடியும் நீயின்றி என்னால் சிரிக்க தான் முடியாது.என்னால் காண முடியும் நீயின்றி என்னால்ரசிக்கத் தான் முடியாது.என்னால் நேசிக்க முடியும் நீயின்றி என்னால்சுவாசிக்க தான் முடியாது.என்னால் சாக முடியும் நீயின்றி என்னால் வாழத் தான் முடியாது.

 [34]
பௌர்ணமி நிலவைப் பார்த்தேன்;உன் முகத்தை கண்டு ரசித்தேன்.அதன் பின்னணியில் கார்மேகத்தை பார்த்தேன்;உன் கூந்தல் கண்டு ரசித்தேன்.மின்னல் பளிச்சிடுவதை பார்த்தேன்;உன் விழிகளை கண்டு ரசித்தேன்.தோட்டத்து ரோஜா மலர்வதை பார்த்தேன்;உன் இதழ் கண்டு ரசித்தேன்.மலர் மனம் வீசுவதை நுகர்ந்தேன்;அதில் உன் வாசம் உணர்ந்து கிறங்கினேன்.ஒன்று சொல் ...பெண்ணே,உன்னை மனதை நான் பார்க்கையில்அதில் என்னைக் கண்கொண்டு ரசிப்பேனா..?

 [35]
தெருவெங்கும் தினம் தோறும்தொலை பேசித் தொடர்ந்தவளே..துணையென்று வந்து விட்டுதுயர் தந்து விலகலாமோ..??பருவங்கள் கடந்தது உன்பாசம் என்று சொன்னவளே..பாதி வழியில் நீ இன்று பாதை மாறிப் போகலாமோ..??உருவங்கள் ஓட்டாதென்றுஉதறிப் போனவளே - என்உணர்வுகளில் இன்னும் நீஒன்றித்து வாழ்வதேனோ..??


 [35]
என்னடி பெண்ணேஎது உந்தன் காதல் அகராதிவிளங்காது விழி பிசுங்கி நிற்கும்விடலை ஆண்யாதியில் நானும் ஒருவன்...கழிவு என்று தூக்கிப்போட்டகாகிதத்தை கூட சேகரித்தாய் பொக்கிஷம் என்றுகாதல் ஜனனித்த முதல் மதங்களில் .....இன்றுகழிவு நீ என்று என்னையே தூக்கிப்போட்டாயே!!!என்னடி நியாயம் இது ? !!எங்கு நான் போய் சொல்ல

 [36]
என் நெஞ்சில்எது வித மாற்றமில்லை..ஏன் இன்று மறந்துபோனாய் உனது சொல்லை??என் வலிகள் ஏன்உனக்கு புரியவில்லை?இதுதான உன்னுடையகாதல் எல்லை??உண்மையான அன்புஎன்னைத் தேடும் வரைஉறங்காமல் காத்திருப்பேன்இறுதி வரை..உணர்வுகள் ஆறுமோதெரியவில்லை??உண்மை அன்புஒரு போதும் சாவதில்லை..

 [37]
யாரென்று தெரியாது - நீ... இணையதளம் இணைத்த இணைப்பு... மன்னிக்கவும்... இனிப்பு... உனக்கும் எனக்கும் ஒரு வித்யாசம்... நிஜங்கள் எனக்கு கை கொடுப்பதில்லை... கனவுகள் உனக்கு கை கொடுப்பதில்லை... இருந்தும், நம்பிக்கையின் பாதையில், ஊர்ந்து கொண்டிருக்கிறோம்... வெற்றி தொலைவல்ல தோழிய...


[38]
நான் காதலிப்பதற்காகவே நீ பிறந்தாய்!
உன்னை காதலிப்பதற்காகவே நான் பிறந்தேன்!
நம்மை காதலிக்க காதல் இருக்கிறது!
நம்மை
காதலிக்கவைக்க காத்திருக்கிறது காதல்!


[39] 
யாருக்கும் தெரியாமல் உன்னை நேசிக்கிறேன்
ஒரு நாள் உனக்கே தெரியாமல் - நீ
என்னை நேசிப்பாய் என்று............


[40] 
உன் நிழலென எனை மாற்றினாய்!
நித்தமமும் நினைவுகளிலும்
நீயே வந்து போகிறாய்..
உன்னோடு வாழவே தவிக்கின்றேன்
என் உயிரின் உணர்வே நீ என்பதால்
...உன் அன்பின் ஆழத்தால் அடங்கி
போகின்றேன் உனக்குள்ளேயே!



 [41] 
காற்றுக்கும் காதல் உண்டு இலைகளின் மேல்!
நிலவுக்கும் காதல் உண்டு வானத்தின் மேல்!
பனித்துளிக்கும் காதல் உண்டு! புற்கள் மேல்!
வண்டுக்கும் காதல் உண்டு மலர்களின் மேல்!
நண்பர்களுக்கும் காதல் உண்டு நட்பின் மேல்!
...எனக்கும் காதல் உண்டு தமிழ்த்தாயே உன் மேல்!


 [42] 
ஒருவர் நினைவை ஒருவர் கொளுத்திக்கொண்டு இருவரும் எரிவோம் மெதுவாக நான் மெழுகுத்திரியாக நீ ஊதுவத்தியாக வேதனையை நான் வெளிச்சப்படுத்துகிறேன் நீ மணம் ஊட்டு அணைத்தும் என்னை மறந்துவிடும் வேதனைக்கு உன் ஞாபகம் சுற்றிக்கொண்டிருக்கும்

 [43] 
உன்னாலே அன்பை உணர்ந்தேன் .....
உன்னாலே எந்தன் உயிரை உணர்ந்தேன் .....
உன்னாலே பிரிவின் வலியை உணர்ந்தேன் ....
உன்னாலே பிரிவிலும் ஓர் வாழ்வை உணர்ந்தேன் ....
உன்னாலே என்னையே நான் உணர்ந்தேன்..
 [44]
ஒரு உயிரை நீ நேசிப்பது உண்மை என்றால் ...!
அதை பறவை போல் பறக்க விடு .....!
அது உன்னை நேசிப்பது உண்மை என்றால் ...!
மீண்டும் உன்னை தேடி வரும் .... !
 
 [45]
அன்புக்கே நானடிமை ஆக வேண்டும்,
உன் அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்,
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்,
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்,
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்,
...பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்,
என் பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்,
என்னோடு நீயென்றும் வாழ வேண்டும், கற்பூர நாயகியே
 [46]
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை.. என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்.. இன்று உன்னை பார்த்தவுடன்.. என்னை தோற்றுவிட்டு.
 

No comments:

Post a Comment