சிந்தனையின் ஊற்று…..
[01]
நட்பின் இலக்கணத்தை மாற்றும் காலமிது நட்பிற்கு விலை கேட்கும் மனிதர்கள் நண்பா...... கவனமாயிரு நட்பை விற்று விடாதே கோடி வருடமானாலும் உன்னால் மீளப்பெற முடியாது ............................
[02]
எங்கிருந்தோ வந்தோம்...எதிர்பாராமல் சந்தித்தோம்.....
இன்பத்துடன் பழகினோம்.....இன்று துன்பத்துடன் பிரிகிறோம்...
[03]
அலைகளுக்கு தெரியும் கடலின் ஆழம். ஒவ்வவொருவர் சிந்தும் கண்ணீர் கறைகளில் தெரியும்பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும்.
[04]
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை.
மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !!!!
[05]
எதிர்பார்க்கிறேன்-அந்தக் கிராமத்து மழையை!
நித்தம் பார்க்கையில் வெறுக்கிறேன்-இந்த நகரத்து மழையை!
[06]
கடந்த பாதைகளில் ஒட்ட முடியாமல்
எத்தனை ஏமாற்றங்கள் சிதறி விழுந்தன.....
[07]
தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.
கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும்
கவனமாக இருக்க வேண்டும் ....!
[08]
பின்னடைவுகளில் இருந்து முன்னுக்கு பயணிக்கவேண்டும்.....
[09]
மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது நமது கடமை......
[10]
ஆறாதஎங்கள் காயத்திற்குஅருமருந்துஅந்த சாலைகளின் ஓரங்களில்காலாற நடத்தலே.....
[11]
இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்
எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்
என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்......
[12]
வானம் எப்போதும் வெறுமையாய் இருப்பதில்லை.......
[13]
பாதங்களுக்குக் கீழே பூக்கள் இல்லை மொய்த்துக் கிடந்தவை முட்களே.
எனினும் ரத்தம் துடைத்து இதுவரை நடந்தே வந்தேன்......
[14]
தேங்காய் உடைக்கிறார்கள் வாழ்க்கை சிதறிப் போகமலிருக்க!
தேங்காய் பொறுக்குகிறார்கள்...வாழ்க்கையில் சிதறிப் போனவர்கள்
[15]
நிழல்களுடன் நிஜங்களாக வாழ்ந்தது போதும்.இனியும் நிழலில் நிஜங்களைஇழக்க விருப்பம் இல்லை....!
[16]
துப்பும் எச்சில் கூட தூரம் சென்று விழவேண்டும் என்று எண்ணுகிறது மனது.ஆனால் தோல்விகளை மட்டும் தோள்களில் சுமக்க எப்படித்தான் விரும்பியே ஏற்கிறதோ தெரியவில்லை.!
[17]
வானம் மட்டும் வஞ்சகமில்லாது அழுதுகொண்டிருக்கிறது தன் ஆசைதீர எம் மக்கள் மனம்போல்..............
[18]
துடிக்கும்போது யாரும் கவனிக்கமாட்டார்கள் நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள்.......
[19]
கால்வயிற்று கஞ்சியுடன் கடுங்குளிரில் நானிருக்க... அடித்து பெய்தமழை ஆறாய் ஓடியது....என் கண்ணீரையும் சேர்த்து.
[20]
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.
[21]
பணத்திற்காக அன்பு வைக்காதே அது பாதியிலே விலகி விடும். அழகுக்காக அன்பு வைக்காதே அது அர்த்தமின்றி போய்விடும். அன்புக்காக அன்பு வை அது அஜந்தா ஓவியம் போல் நிலைத்திருக்கும்....
[21]
அலட்சியமாக விடும் சிறு சிறு தவறுகள்.........நேசிக்கும் ஒருவர் உறவையே பிரித்திடும்...
[22]
அழகை நேசிக்காதே, அறிவை நேசி.....
பணத்தை நேசிக்காதே, பாசத்தை நேசி.....
[23]
கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்
[24]
உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்
[25]
கோபம் உன்னை நேசிப்பவர்களை கூட வெறுக்க வைக்கும்... ஆனால் அன்பு உன்னை வெறுப்பவர்களைக் கூட நேசிக்க வைக்கும்.....
[26]
வாழ்வில் சாதிக்கவேண்டுமெனில் வேறு எதுவுமே தேவையில்லை. முழுமையான நம்பிக்கை, தூய்மையான அன்பு, முயற்சி மட்டுமே போதும். வாழ்க்கை ஆயிரம் காரணங்களை நீங்கள் அழுவதற்காகத் தரும்போது, நீங்கள் புன்னகைக்க பல காரணங்களை வாழ்க்கைக்குக் கொடுங்கள்.
[27]
இழப்பதற்க்கு ஒன்றுமே இல்லை அனால் ஜெயிப்பதற்கு உலகமே உள்ளது ......கவலையை விடு ....
[28]
கடுமையான கஞ்சத்தனம் தகுதியற்ற தற்பெருமை எல்லையற்ற பேராசை இந்த மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்
[29]
உன்னைச் சிரிக்க வைக்க நினைப்பவரை நீயும் சிரிக்கவை, உன்னைப் பார்த்து சிரிப்பவரை நீ சிந்திக்கவை.
[30] நல்லவனாய் இரு ஆனால் கோழையாய் இராதே.
[31]
நியமற்ற இவ்வுலக வாழ்விலே நிழல்களைக்கண்டு உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே..!
[32]
அழகை நேசிக்காதேஅறிவை நேசி,பணத்தை நேசிக்காதேபாசத்தை நேசி,ஆடம்பரத்தை நேசிக்காதேஅடக்கத்தை நேசி,ஆணவத்தை நேசிக்காதேஅன்பை நேசி ஏனெனில் ஆணவம் அழிவுப்பாதையை விரைவில் நோக்கி செல்லும்...!!
[33]
"எல்லா நேரங்களில் சிலரையும், சில நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியாது
[34]
பிறப்பிற்கும் இறப்பிற்குமான இடைவெளி வாழ்க்கை - அந்த நீரோட்ட நீட்சிக்குள் இன்பம்,துன்பம்......... உயர்வு,தாழ்வு.....ஏழை,செல்வந்தன்........
[35]
ஒரு மனிதன் தனது துயரத்தில் தான் உண்மையான மனிதர்களை அறிகின்றான் . . . .!!
[36]
சிறகுகள் கிடைத்தவுடன் பறப்பதல்ல நட்பு,சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் உண்மையான நட்பு . . . !!
[37]
துன்பத்தை மறந்தாலும் துன்பம் புகட்டிய பாடத்தை மறந்து விடக்கூடாது.......!!
[38]
அழகு இருந்தால் வருவேன் என்றது காதல், பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம், எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது உண்மையான நட்பு...!!
[39]
காலத்தால் உருவங்களை மட்டும் தான் அழிக்க முடியுமே தவிர, அதன் நினைவுகளை அல்ல..
[40]
தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து தன்னம்பிக்கையின் வலிமையால் அக்னிச் சிறகுகள் விரித்துப் பறந்து இலக்கையாடைவோம்...!
[41]
வாழ்க்கை என்பது........... ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்! ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்!! ஒரு இலட்சியம் - சாதியுங்கள்!!! ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்!!!! ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்!!!!! ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்!!!!!!
[42]
தோல்வியின் அடையாளம் "தயக்கம்" வெற்றியின் அடையாளம் "துணிச்சல்"... துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!!!
[43]
அன்பு" யார் மீதும் காட்டலாம் ஆனால் "கோபம்" உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்
[44]
உன் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் உன்னை நேசிப்பது இல்லை..
உன்னை நேசிப்பவர்கள் எல்லோரும் உன் அருகில் இருப்பது இல்லை
[45]
வாழ்க்கை புரியாத போது தொடங்குகிறது, புரிகின்ற போது அது முடிந்து விடுகிறது.
[46]
நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
[47]
நிழல்களின் ஒப்பந்தங்களை விட நிஜங்களின் போராட்டமே சிறந்தது!
[48]
ஆசை படுவதை மறந்துவிடு
ஆனால் ஆசைபட்டதை மறந்து விடாதே
[49]
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!உங்கள் கண்ணீர்,உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!.
[50]
[51]
அழும் போது தனியாக அழு..!!
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.!!
ஏன் என்றால் இந்த உலகம் விசித்திரமானது
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்.!
தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.!
...புரிந்து கொள்ள முடியாத உலகம்
நீயாவது புரிந்து கொள்.!!
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.!!
ஏன் என்றால் இந்த உலகம் விசித்திரமானது
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்.!
தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.!
...புரிந்து கொள்ள முடியாத உலகம்
நீயாவது புரிந்து கொள்.!!
அருமையான தத்துவங்கள்...
ReplyDeleteசிந்திக்கத்தக்க விடயங்கள்
அருமை நண்பா
ReplyDelete