Search

Tuesday, October 4, 2011

ஜோ‌திட‌ம்

http://www.tamilkalanjiyam.com/

http://astrology.dinakaran.com/Numerology.aspx

http://www.4shared.com/file/z3bKoMAx/Birth_Date_Horoscope_Tamil.html 

http://www.4shared.com/file/5tX9axYJ/Numerology_En_Jothidam_En_kani.html 

 http://www.astrosuper.com/2011/11/blog-post_22.html

பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து

 பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் அவர்களின் ஜாதக பலன்கள் அறிவது பற்றி பார்க்கலாம்.


விஞ்ஞானம் மெய்ஞானம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் ஜோதிட்த்தின் மீதான நம்பிக்கை ஒரு பக்கம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது அதன் அடிப்படையில் தான் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்கள் பிறந்த நேரத்தை குறித்து வைத்து யாராவது ஒரு ஜோதிடரிம் கொடுத்து அவர்கள் வழியாக நட்சத்திரமும், ராசியும், , அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் ஜாதகமும் எழுதி வாங்குவது வழக்கம். ராசி நட்சத்திரம் சரியாக தெரிந்துகொள்ள முடிகிறது அதே நேரத்தில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள்கள் அவ்வளவு சிறப்பானதாக தெரியவில்லை இருப்பினும் அதற்கான தரவிறக்கமும் தருகிறேன்.

இனி முதலில் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அவர்கள் நட்சத்திரம் மற்றும் ராசி கண்டு பிடிக்க.

குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி

முதலாவதாக Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்)
தளம் சென்று பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் கொடுக்கவும் நீங்கள் இந்தியாவில் இருந்தால் Time Zone மாற்ற வேண்டியதில்லை வெளி நாடுகளில் பிறந்த குழந்தையாய் இருக்கும்பட்சத்தில் அதற்கான Time Zone மாற்றவேண்டியது அவசியமாகும் இந்த தளம் உபயோகிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது. 1901 ம் ஆண்டு முதல் 2100 ம் ஆண்டு வரையிலான நட்சத்திரம் மற்றும் ராசி இரண்டையும் எளிதாக அறிய முடியும்.

இரண்டாவதாக இவர்களும் Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்)




சரியான பதிலை தருகிறார்கள் ஆனால் கொஞ்சம் நம்மை அதிகம் கேள்வி கேட்டு குழப்புவார்கள் உதாரணத்துக்கு Latitude, Longitude இவையிரண்டும் ஜோதிட்த்தில் அவசியமே ஆனால் நமக்கு சரியான இடத்திற்கான Latitude, Longitude எல்லோருக்கும் தெரிவதில்லை ஆனால் அதை எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலான மென்பொருள் ஜாதகம் கணிக்கும் மென்பொருளின் உள்ளே அந்த வசதியும் இருக்கிறது அதை வைத்து இங்கு தேவையான Latitude, Longitude இரண்டையும் நிரப்ப முடியும். இவர்களின் முடிவும் சரியாகவும் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறது.

இப்பொழுது உங்களால் மிக எளிதாக பிறந்த குழந்தையின் நேரத்தை வைத்து ராசி மற்றும் நட்சத்திரம் தெரிந்துகொண்டிருப்பீர்கள் மேலும் நட்சத்திர, மற்றும் ராசி பலன்கள் தெரிந்து கொள்ள.

நட்சத்திரம் மற்றும் ராசியின் பொதுவான பலன்கள்

பொதுவான நட்சத்திர பலன் தெரிந்து கொள்ள tamilkalanjiyam  , astrology.himadurai





பொதுவான ராசி பலன் தெரிந்து கொள்ள astrology.dinakaran





இனி நட்சதிரத்துகான பெயர் அடிப்படையில் பெயர் வைப்பதற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்து தொடக்க எழுத்தாக அமையவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள.

பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து

நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து தெரிந்து கொள்ள baby names based on birthstar




எழுத்துக்கள் தமிங்கிழிஷ் அடிப்படையை கொண்டது உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்துக்கு Cho, Che, Chu, La இதை சு,சே,சோ,ல என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும், தெவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து





பிறந்த குழந்தைக்கான நட்சத்திரம் ராசி தெரிந்து கொண்டாகி விட்டது அதனிடையே பொதுவான நட்சத்திர, ராசி பலனகளும் தெரிந்துகொண்டோம் இனி குழந்தைகளுக்கான பெயர் எந்த தளங்களில் தேடலாம் என்பதற்காக சில தளங்களை வரிசை படுத்தப்பட்டிருக்கிறது.

அழகான தமிழ்பெயர்களை நட்சத்திரப்படி வைக்க உதவும் பயனுள்ள தளம்.


குழந்தைகளுக்கான பெயர்கள் தேட

web.archive.org


thamizhagam.net

shaivam.org

pudhucherry.com

anbutamil.com

babynames.looktamil.com

indiaparenting.com

hinduchildnames.com





Copy from:
http://gsr-gentle.blogspot.com/2011/10/baby-natchathiramraasiname-first-letter.html

****************************************************************

ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்

இனி இந்த பதிவின் வாயிலாக நட்சத்திரங்களின் கிரகங்களையும், நட்சத்திரங்களுக்கான ராசிகளும், கிரகங்களுக்கான தெய்வங்களையும், மேலும் நட்சத்திரத்துக்கான அதிஷ்ட தெய்வங்களையும் தெரிந்துகொள்ள
நட்சத்திரங்களுக்கான முதல் எழுத்து , அதிஷ்ட தெய்வம், பொதுவான குணம்







பிடிஎப் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் முந்தைய பதிவில் நட்சத்திரங்களுக்கன முதல் எழுத்து ஆங்கிலத்தில் கொடுக்கபட்டிருந்த்து இந்த பதிவில் இனைக்கப்பட்டிருக்கும் பிடிஎப்-பில் தமிழ் எழுத்துகளும் அதற்கு நிகரான ஆங்கில எழுத்துகளும், தமிழுக்கு நிகரான ஹிந்தி எழுத்துகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது, புத்தகத்தின் தகவல்கள் யாவும் பல தளங்களில் இருந்து சேகரிக்கபட்டவையே.

இனி அடுத்த்தாக முந்தைய பதிவில் சொல்லியிருந்தபடி பிறந்த நாள், மற்றும் பிறந்த நேரம் வைத்துக்கொண்டு ஜாதகம் கணிப்பது பற்றி பார்க்கலாம் இதற்கு இரண்டு வகையான மென்பொருள்கள் தருகிறேன் அதே நேரத்தில் இதில் வரும் தகவல்கள் 100% உண்மையானது என்பதை உறுதிபட கூற முடியவில்லை. என் ஜாதகத்தையும் இன்னும் சில ஜாதகங்களையும் வைத்துக்கொண்டு சோதித்து பார்க்கும் போது சில மிகச்சரியாய் இருக்கிறது சில தவறாக இருக்கிறது குறிப்பாக குறிப்பாக மதியம் 12 மணி அதற்கு முன்பும் பின்பும், இரவு 12 மணி அதற்கு முன்பும் பின்பும் வரும் பிறப்புகளில் இந்த பிரச்சினை இருப்பதாக உணர்கிறேன் மற்றபடி பொதுவான பலன்கள் மற்றும் சிறப்பு பலன்கள் என பார்க்கும் போது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருக்கிறது. இப்போதைய நேரத்தில் உள்ள பிரச்சினைகளை அறிய முடிகிறது சில உடல் உபாதைகள் என்பதாக காட்டப்படுபவையை தவறு என்று நிராகரிக்க முடியவில்லை.

முதலாவதாக Tamil Astrology Software







ஜாதகம் மற்றும் கணிக்கும் மென்பொருளை பற்றி பார்க்கலாம், இதை பயனபடுத்துவது மிக எளிது இதில் தேவையான அயானாம்சம் முறையை தெரிவு செய்யவும் இதற்கு File -> Preference செல்லவும்.



இரண்டாவதாக Tamil Horoscope Software







ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலத்தான் இந்த மென்பொருள் இருக்கிறது ஒரு மென்பொருளில் மூன்று விதமான பயன்பாடுகள், ஜாதகம் கணிக்கும் வசதி, திருமண பொருத்தம் பார்க்கும் வசதி, வருட பலன் பார்க்கும் வசதி அதை விட ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி, தெலுகு, ஹிந்தி என ஆறு மொழிகளில் பலன் தெரிந்துகொள்ள முடியும் இதனால் பிற மொழி பேசுபவர்களுக்கும் இந்த மென்பொருள் உதவும்.




******************************************************

கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கைரேகை ஜோதிடம் பற்றி பார்க்கலாம். ஜோதிடங்களில் பலவகை அதில் இதுவும் ஒருவகை, மிக பழமையானதும் கூட இந்த கைரேகை ஜோதிடம் தான். நான் ஜோதிடம் பற்றி எழுதுவதால் நான் ஜோதிடன் அல்ல நான் இதை முழுதாய் கற்றுதெளிந்தவனும் இல்லை இருந்தாலும் சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஜோதிடம் உண்மையா, பொய்யா என்பதை பற்றி நான் விவாதிக்கவில்லை இதை நம்புவர்கள் நம்பலாம் நம்பிக்கையில்லாதவர்கள் அவர்கள் விருப்பம் போல செயல்படலாம். நான் இப்படி சொல்வதால் இதை நம்புகிறவனும் முழுதாய் நம்புகிறவன் இல்லை அதே நேரத்தில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு என்னிடம் வெறும் வலது கை ரேகையை மட்டும் பெற்றுக்கொண்டு இன்னும் சில பல கேள்விகள் இறுதியில் ஒரு ஆடியோ கேசட்டில் தகவல்களை பதிந்து கொடுத்தனர் அதில் என்னால் நம்ம முடியாத தகவல்கள் என் பெயர், அப்பா, அம்மா, சகோதரி, சகோதரனின் பெயர் அனைவரின் படிப்பு மற்றும் அப்பாவின் வேலை அம்மா குடும்பத்தலைவி இப்படியாக பல தகவல்கள் நான் தளர்ந்து போகும் நேரங்களில் அவ்வப்போது கேட்பதுண்டு ஏதோ ஒரு நம்பிக்கை வந்தது போல இருக்கும் ஒரு விதம் அவற்றில் சொன்ன விஷ்யங்கள் இந்த பதிவை எழுதும் வரை நடந்தே வந்திருக்கிறது இனிமேல் எப்படி என்பது தெரியவில்லை பொருத்திருந்து பார்க்கலாம்.

இந்த கைரேகை என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!

இனி சாதரணமாக ஒரு கைரேகை பார்க்கும் போது வெறும் ரேகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பதில்லை கையில் இருக்கும் ரேகை, விரலில் வளைவு கையில் உள் பாகத்தில் இருக்கும் மேடு பள்ளம், நகம், விரலின் நீளம் என பலதரப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்க்கின்றனர்.

என்னால் உங்களுக்கு அத்தனையும் சொல்லி தர இயலாது என்பதை விட தெரியாது என்பது தான் உண்மை ஆனாலும் அடிப்படையாக சில விஷயங்களை நாமே தெரிந்துகொள்ள முடியும். நான் கீழே இனைத்திருக்கும் படத்தின் வாயிலாக உங்களின் தலைவிதி, வாழ்க்கை, உங்களின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி, வெற்றியின் வாய்ப்பு, உடல் நலம், இதயம், திருமண வாழ்க்கை, குணாதிசயம், வழி நடத்தும் திறமை, தன்னம்பிக்கை போன்றவற்றின் ரேகைகளை தெளிவாக அறியும் வகையில் உள்ள படம் இனைத்திருக்கிறேன் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக பார்க்கலாம்.



உங்களுக்கு வணிகத்திறமை இருக்கிறதா, கவித்திறமை இருக்கிறதா, பள்ளி, கல்லூரி நடத்தும் அல்லது ஆசிரியர் ஆகும் திறமை இருக்கிறதா என்பதையும் மேலும் சில விஷயங்களையும் கீழிருக்கும் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.



உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கான உறவு பலத்தை கீழிருக்கும் படம் வழி அறியலாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.



தங்களுக்கு எத்தனை மழலைச் செல்வங்கள் பிறக்கும் அது ஆணா, பெண்ணா என்பது வரை அறியமுடியும் என இதில் கரை கண்டவர்கள் சொல்கிறார்கள் அந்த ரேகை எந்த பகுதியில் இருக்கிறது என படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.



உங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் கைரேகை வழி அறியலாம் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.



ஒரு மனிதனின் ஆயுட்காலமும் அறியமுடியும் என்கிறார்கள் இதன் நிபுனர்கள் அதற்கான ரேகையை பாருங்கள் உங்களுக்கும் புரியும். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.



எல்லாவற்றையும் விட இதுவும் உங்களை ஆச்சரியப்படுத்தும் உடலில் உள்ள நோய்களையும் கையை பார்த்து சொல்லமுடியும் என்கிறார்கள் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறும் நிறம் கருப்பு நிற புள்ளி போன்றவை நம் உடலில் இருக்கும் நோயை குறிக்குமாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.



என்ன நண்பர்களே வெறும் பட்த்தை மட்டும் இனைத்தால் எப்படி தெரிந்துகொள்ள முடியும் என்கிறீர்களா அதற்கு தான் உங்களுக்கு அடிப்படை புரியும் வகையில் மேலும் சில படங்களையும் தமிழில், ஆங்கிலத்தில் பிடிஎப் புத்தகங்களையும் அப்லோட் செய்திருக்கிறேன் விரும்புவர்கள் இந்த கைரேகை படிக்கலாம்





பொதியை தரவிறக்கி படித்து பார்க்கவும்.

என்ன நண்பர்களே உங்களுக்கு ஆச்சரியாமாக இருக்கிறதா நம் தளத்தில் இப்படித்தான் பலதரப்பட்ட தகவல்கள் அவ்வப்போது வரும். மேலும் ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் இதில் பார்க்கும் போது உங்களுக்கு இதில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு ஒத்து போகவில்லையா? இதை நினைத்து கவலைப்படவேண்டாம் இங்கு படித்ததை மறந்து விடுங்கள் நான் அப்படித்தான் எனக்கு ஒத்துப்போகும் விஷயங்களை மட்டுமே நம்புவேன் என்னில் ஒத்துப்போகாத விஷயங்களை இதெல்லாம் வெட்டி வேலை என ஒதுக்கி விடுவேன். பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

மேலும் சில படங்கள் : விக்கிபீடியா







கைரேகை ஜோதிடம்: விக்கிபீடியா





1 comment:

  1. super sir ,visit to my jothida express
    www.supertamilan.blogspot.in

    ReplyDelete