Search

Sunday, August 29, 2010

நகைச்சுவை

நகைச்சுவை.......

[01]
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர்     : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க


[02] டாக்டர்      : எப்படிப்பா அடிபட்டுச்சு?
நோயாளி : பஸ்சுலே போறப்ப 'சுறா' படம் போட்டாங்க!
                     தியேட்டர்னு நினைச்சு வெளியிலே வந்துட்டேன்
டாக்டர்      : நல்லவேளை வெளியே வந்தப்பா...
                      இல்லைன்னா செத்திருப்ப...!!


[03]
வாடிக்கையாளர் : வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்           : ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்  : 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்           : 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்  : இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

[04]
வாசகர்         : என்ன சார் உங்க பேப்பர்ல உப்பு சப்பே இல்ல...
எழுத்தாளர் : படிக்க சொன்னா உங்கல யார் சார் நக்கி பாக்க சொன்னது..



[05]
அப்பா: அப்பா சொன்னா கேட்கணும் இல்லாட்டி நீ உருப்படவே மாட்டேடா.
மகன்: அதை இப்போ நினைச்சு என்ன பிரயோஜனம். தாத்தா   செல்லும்போது நீங்கள் கேட்டிருக்கணும்.

[06]
மன்னா, எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்.அரண்மனைக்கு நாம் ஏற்கனவே 'கான்கீரிட்' போட்டாச்சு. ஓலை வேண்டாம். திருப்பி அனுப்பிவிடும்!.........

[07]
ராமு: சரி! கோழியில இருந்து முட்டை வந்ததா இல்லை
முட்டையில இருந்து கோழி வந்ததா?
சோமு: கோழியில இருந்து தான் முட்டை வந்தது.
ராமு: ஏன்னா, முட்டையில இருந்து சேவல் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கே


[08]
டீச்சர்       :  மகாகவி பாரதி தெரியுமா?
பையன் : மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!


[09]
கண்ணீர் துடைக்க உன்னைப்போல்
ஒரு நண்பன் இருந்தால்.......1000 விஜய் படம் வந்தாலும் துணி்ந்து பார்ப்பேன்....
:::::::::::::நண்பேன்டா:::::::::::::


[10]
கணவர்     : காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி  :  ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......


[11]
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க..


[12]
லண்டன் ஏர்போர்ட்டில் புத்தகம் படித்த இந்திய விமானி வேலையில் இருந்து நீக்கம்.. அப்படி அவர் என்ன படித்தார் ?..
..

..
.....

30 நாட்களில் விமானம் ஓட்ட கற்றுகொள்வது எப்படி...?
[13]
ஒருவனுக்கு மகளிர் விடுதியில் (girls hostel) வேலை கிடைக்குது..... 2 மாசத்துக்கு அப்பறம்

முதலாளி :ஏன்டா சம்பளம் வாங்க வரல ?

கொக்கமக்கா சம்பளம் வேற இருக்கா.....?
[14]
A: மாடு போல சின்னதா இருக்கும்!
ஆனா அது மாடு இல்ல!
அது என்ன? . .

B: தெரியலை.....?
......
A: அது கண்ணுக் குட்டி! . .

“கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?”..
[15]
கணவன்: "ஏன்டீ! எப்பப் பார்த்தாலும் வாழைப்பூ மாதிரி தலையைக் குனிஞ்சிக்கிட்டே இருக்கே?
மனைவி: "கொஞ்சம் நிமிர்ந்து அங்கும் இங்கும் பராக்குப் பார்த்திருந்தா உங்களைக் கட்டித் தொலைச்சிருப்பேனா?
[16]
"உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே?"
"நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் அதான்
[17]
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா, கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு....
[18]
நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்


[19]
மனைவி: : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............
கணவன் :: அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி . . . . ???? :-(


[20] 
மனைவி: ஏங்க.. கொஞ்சம் வாங்க.. குழந்த அழுவுது..
கணவன்:
அடி செருப்பால! உன்னை எவன்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

No comments:

Post a Comment