[01]
ஒரு மனிதனின் தலை சிறந்த நண்பர்கள் , அவனுடைய பத்து விரல்கள். - ராபர்ட்
[02]
தேவைகளை குறைத்து, உழைத்து வாழ்வதே உயரிய நாகரிகம். - காந்திஜி
[03]
நான் மழையில் நனைவதை விரும்புகிறேன். நான் அழுவதை யாருக்கும் தெரியாது என்பதால். - சார்லி சாப்ளின்
[04]
கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை. - இ.டர்னர்
[05]
கற்பனை என்பது அறிவை விட சிறந்தது. - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
[06]
கல்மனம் படைத்த நண்பர்களை விட கொலைகாரன் ஒன்றும் கொடியவனல்ல. - விவேகானந்தர்
[07]
மனிதனை எது அடிமையாக்குகிறதோ, அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது. - போப்
[08]
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்; செய்ய முடியாதவன் போதிக்கிறான். - பெர்னாட்ஷா
[09]
உண்மைக்கு பகை, உள்ளத்தில் தோன்றும் பயம். - ராஜாஜி
[10]
கடவுளிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள்; ஆனால் அவர் கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள். - நார்மன் வின்சென்ட் பீல்
[11]
உண்மை ஊடுருவும் சூரிய ஒளி போன்றது.அதை யாராலும் மூடி மறைக்க முடியாது. - மில்டன்
[12]
தோட்டத்து பூக்களைபோல் புன்னகை வீசிடுங்கள், வாட்டத்தை போக்குகின்ற வார்த்தையை பேசிடுங்கள். - கவிஞர் வைரமுத்து
[13]
நம்மை வெல்ல யாரும் இங்கு பிறக்கவில்லை என்பது பொய். மற்றவரை வெல்ல நாம் இங்கு பிறந்திருக்கிறோம் என்பதே உண்மை. - ஃபாயிஷாகாதர்
[14]
நல்ல செயல் எப்போதும் உலகில் தனக்கு ஓர் இடம் உண்டாக்கிக் கொள்ளும். - எமர்சன்
[15]
பிறரது குற்றங்களைப் பற்றி ஒரு போதும் பேசாதே; அதனால், உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை. - சுவாமி விவேகானந்தர்
உண்மை ஒரு கசப்பான மருந்து; ஆனால் அதன் விளைவு இனிமையானது. - அலெக்சாண்டர்
[17]
செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு; எல்லா விஷயங்களையும் இயக்குவதும் அதுவே. - டேனியல் வெப்ஸ்டர்
[18]
சிறு துன்பங்கள் வாய் திறந்து பேசும், ஆனால் பெருந்துன்பங்கள் ஊமையாக இருக்கும். - சி.சிப்பர்
[19]
நாமனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் குறிக்கோளுடன் வாழ்கிறோம்; நம் வாழ்க்கைகள் எல்லாம் வேறுபட்டவை, இருப்பினும் ஒன்றே. - அணி பிரான்க்
[20]
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள் - ஆலன் ஸ்டிரைக்
[21]
மற்றவர்களின் குறைகளைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்காதே. அவர்களின் நல்ல குணங்கள் உனக்கு தெரியாமலே போய் விடும். - அன்னை தெரசா
[22]
மிகப்பெரிய சந்தர்ப்பம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கிடைக்கும்; அதைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றி காண வேண்டும். - மெகல்லன்
[23]
உறுதியான மனம் படைத்தவனே உன்னதமான எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அமைத்துக் கொள்கிறார். - நார்மன் வின்சென்ட் பீல
[24]
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார்; காணாமல் போய்விடும். - அப்துல் கலாம
[25]
பொய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சம்; வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மை. - நேரு
[26]
சாகசச் செயல்களின் நறுமணம் தான் புகழ். - சாக்ரடீஸ்
[27]
அதிர்ஷ்டத்தை வார்க்கும் அச்சு அவரவர் கையிலேயே உள்ளது. - பேக்கன்
[28]
நன்றாகவும், கவனமாகவும் செய்யப்பெற்ற காரியங்களைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை. - ஷேக்ஸ்பியர்
[29]
இன்னுமொரு முறை சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைய நான் விரும்பவில்லை. அறிவுச் சுரங்கத்தின் கதவுகளைத் திறந்தவன் என்று அனைவரின் நினைவிலும் நிற்கவே நான் விரும்புகிறேன். - ஸ்டீபன் ஹாக்கிங்
[30]
[31]
[32]
[33]
[34]
உன் எண்ணம் விண்ணை தொட வேண்டும் என்றால் உன் வியர்வை மண்ணை தொட வேண்டும்
[35]
வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது...
No comments:
Post a Comment